சிவபுரிபட்டி சிவன்கோயில் தெப்பக்குளத்தில் சீமைக்கருவேல மரங்கள்
ADDED :3192 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் கோயில் தெப்பக்குளத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு பழமையான சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் அருகே அம்மன் சன்னதி முன்பாக கோயில் தெப்பக்குளம் உள்ளது.
போதிய மழையும், நீர்வரத்தும் இல்லாததால் இந்த குளத்தில் தண்ணீர் தேங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது அதில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து தெப்பக்குளம் இருந்த இடமே தெரியாமல் மூடிக்கிடக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலின் அழகை ரசிக்க முடியாத நிலை உள்ளது. இவற்றை அகற்ற பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகாவது இந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி, குளத்தை சுத்தப்படுத்த அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.