இரு வாசல் தரிசனம்!
ADDED :3584 days ago
108 திவ்விய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சொர்க்க வாசல் கிடையாது. இதற்குக் காரணம் இத்தலசுவாமி நேரே வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்ததாக ஐதீகம். இவரை வணங்கினாலே பரமபதம் (மோட்சம்) கிட்டும். மேலும் இங்குள்ள உத்தராயன, தட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் பெருமாளை தரிசிக்கச் செல்லவேண்டும். அந்தந்த மாதத்திற்கேற்ப ஒரு வாசல் மட்டுமே திறந்திருக்கும்.