மீசைப் பெருமாள்!
ADDED :3584 days ago
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி திருக்கோயிலில், பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசியன்று முத்தங்கி (முத்தலான ஆடை) அணிவிக்கப்படுகிறது. அதன்பின் பத்து நாட்கள் தொடர்ந்து குளிர்கால உடைகள் அணிவிக்கப்படுகின்றன. 108 திவ்விய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலில், மூலவர் மீசையுடன் காட்சி தருகிறார். தேரோட்டியின் அழகு, கம்பீரத்தை உணர்த்துவது மீசை என்பதால் இக்கோயிலில் வேங்கடகிருஷ்ணர் மீசையுடன் அருள்பாலிக்கிறார். இதனால் இவருக்கு மீசைப்பெருமாள் என்ற பெயரும் உண்டு. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது பகல் பத்தின் ஆறாவது நாளிலிருந்து பத்தாம்நாள் வரை மட்டுமே இவரை மீசை இல்லாமல் தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடைபெறும்போது மட்டும் மீசையுடன் அலங்காரம் செய்வர்.