உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமபதம் விளையாட்டு

பரமபதம் விளையாட்டு

வைகுண்ட ஏகாதசி இரவு கண்விழித்து பரமபதம் விளையாடும் சம்பிரதாயம் உள்ளது. விளையாட்டில் ஏணி வழி ஏறிச்சென்றால் சொர்க்கம்; சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் சறுக்கி மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும். ஏணி என்பது புண்ணியம் பாம்பு என்பது பாவம். பாவம் செய்தால் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும். புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமால் உறையும் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் பரமபத விளையாட்டு உணர்த்துகிறது. இறைவனோடு ஒன்றுவதால் பிறவி உருப்பெறும் என்பதே ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதே பரமபதவாசல் திறப்பும் வைகுண்ட ஏகாதசி திருநாளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !