உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளை வரம் தரும் தை மாத ஏகாதசி

பிள்ளை வரம் தரும் தை மாத ஏகாதசி

தை மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசியை புத்ரதா ஏகாதசி எனப் போற்றுகின்றன புராணங்கள். பத்ராவதி நகரின் அரசர் சுகேதுமான். அவர் மனைவி சம்பகா. இவர்களுக்கு வெகுநாட்களாக புத்திரப்பாக்கியம் கிடைக்கவில்லை. எவ்வளவோ கோயில்களுக்குச் சென்றும், வழிபாடுகள் செய்தும் பலன் கிடைக்காததால் மனச் சோர்வு அடைந்த மன்னன், ஒருநாள் காட்டில் விச்வே தேவர்களைச் சந்தித்தான். புத்ரதா ஏகாதசியில் உபவாசம் இருந்து இன்று மகாவிஷ்ணுவை பூஜை செய்தால், உத்தமமான பிள்ளை பிறக்கும்! என்ற அவர்களது அறிவுரைப்படி, தை மாத வளர்பிறை ஏகாதசியன்று விரதம் இருந்து பிள்ளைப்பேறு வாய்க்கப்பெற்றான். ஆகவே, திருமணமாகியும் வெகு நாட்களாக குழந்தைப்பேறு வாய்க்காதவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, பெருமாளை வழிபட்டு பிள்ளை வரம் பெற்று மகிழலாம். அதேபோல், தைமாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ஸபலா ஏகாதசி என்பார்கள். இந்நாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதால், அனைத்து விதமான பாவங்களும் பொசுங்கும் என்கின்றன ஞானநூல்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !