உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகிரிநாத சுவாமி பெருமாள் கோவிலில் ஆழ்வார் மோட்சம்

அழகிரிநாத சுவாமி பெருமாள் கோவிலில் ஆழ்வார் மோட்சம்

சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று ஆழ்வார் மோட்சம் விழா நடந்தது. சேலம், கோட்டை அழகரிநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிச., 28ல் துவங்கியது. 29ல் பகல் பத்து உற்சவம் துவங்கி, ஜன., 6 வரை தினசரி காலை சிறப்பு அலங்காரம், மாலை ஆராதனை நடந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவின், முக்கிய நிகழ்வான ஆழ்வார் மோட்சம் நேற்று நடந்தது. அழகிரிநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள், அபி?ஷக ஆராதனை நடந்தது. பின்னர் இரவு, 10:00 மணிக்கு கோவிலில் உள்ள ஆழ்வார்களுக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !