நடுபழநி முருகன்
ADDED :3581 days ago
திண்டிவனம் அச்சிறுப்பாக்கத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மலையின்மீது அமைந்துள்ளது நடுபழநி முருகன் கோயில். கண்டிகை என்ற ஊரைச் சேர்ந்த முத்துசுவாமி என்ற பக்தருக்குக் கனவில் முருகன் தோன்றி கட்டளை இட்டதால், அவர் காவடி சுமந்து ஊர் ஊராகச் சென்று திருப்புகழ் பாடி, நிதி திரட்டிக் கட்டிய கோயில் இது. இந்தக் கோயிலுக்கு வருகை புரிந்த காஞ்சி மஹாஸ்வாமிகள், இந்தத் தலத்தை நடுபழநி என்று அழைத்துச் சிறப்பித்துள்ளார். இங்குள்ள முருகப்பெருமானை தரிசித்தால் நாகதோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.