உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி வழிவிடு வேல்முருகன்

திருச்சி வழிவிடு வேல்முருகன்

திருச்சி ஜங்ஷன் ரவுண்டானாவுக்கு அருகில் அமைந்துள்ளது. வழிவிடு வேல் முருகன் கோயில். ராமேஸ்வரம் கடலில் இருந்து கரை ஒதுங்கிய அழகிய முருகப்பெருமானின் விக்கிரகத்தை, இங்கே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாகப் பயணிக்கும் பக்தர்களுக்குப் பக்கத் துணையாக இருந்து, அவர்களுக்கு நல்வழி காட்டி அருள்கிறார் இந்த முருகன் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் அன்பர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !