கழுகுமலை அற்புதம்!
ADDED :3581 days ago
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது கழுகுமலை. இங்கே மயில் வாகனத்தில் ஆறு திருக்கரங்களுடன் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான் சிறந்த வரப்பிரசாதி. இங்கே இவரது மயில் வாகனம் முருகப் பெருமானுக்கு இடப்புறமாக திரும்பி நிற்கிறது. அதேபோல், இந்த முருகன் கோயிலில் உள்ள தூண்களில், ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் சிற்பங்கள் இடம்பெற்றிருப்பதும் சிறப்பம்சம்.
கழுகுமலை சமணச் சிற்பங்களுக்கும் பெயர்பெற்ற ஊர். களப்பிரர் காலத்தில் இந்தப் பகுதியில் சமண சமயம் வேரூன்றி வளர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி வரலாற்று தலமாகவும் திகழ்கிறது கழுகுமலை!