உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்ன திருச்செந்தூர்!

சின்ன திருச்செந்தூர்!

பேரலை பொங்கும் திருச்சீரலைவாய்  பெரிய திருச்செந்தூர்; சிற்றலை தாலாட்டும் புதுக்குடி சின்ன திருச்செந்தூர்! என்று வாரியார் சுவாமிகளால் புகழப்பெற்ற திருத்தலம். சிற்றலை புதுக்குடி சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புதுக்குடி கிராமம். திருச்செந்தூரில் சண்முகப் பெருமானுக்கு நடத்தப்படும் அனைத்து விழாக்களும் அதே முறையில் புதுக்குடியிலும் நடத்தப்படுகின்றன. இந்தத் திருக்கோயில் நந்தவனத்துக்கு அருகில் காணப்படும் கூந்தப் பனை சிறப்பு வாய்ந்தது. சுயம்புவான இந்தக் கூந்தப் பனையை மனிதர்கள் எவரும் நட்டு வளர்க்க முடியாது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !