லட்சுமி நரசிம்மர் கோவிலில் வழிபாடு
ADDED :3223 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அருகே ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், நேற்று முன்தினம் மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சிம்ம மலையில் உள்ள சீனுவாச பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர் முடி காணிக்கை செலுத்தியும், எடைக்கு எடை தானியம் வழங்கியும் வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு மணிபால அடிகளாரின் ஆன்மீக சொற்பொழிவு, பஜனை கச்சேரி நடந்தது.