திருப்பதிக்கு நடைபயணம்
ADDED :3223 days ago
செஞ்சி: செஞ்சியில் இருந்து திருவேங்கடகிரி நாம சபாவினர் நடை பயணமாக திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர்.
செஞ்சி திருவேங்கடகிரி கோவிந்த நாம சபா சார்பில் 17ம் ஆண்டாக திருப்பதி நடைபயணம் செய்ய கடந்த மார்கழி மாதம் 350 மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்தனர். நேற்று இவர்கள் செஞ்சி சிறுகடம்பூர் ராதாருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில்இருந்து பாதயாத்திரையை துவங்கினர். இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு ராதா ருக்மணி சமேத
கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 8 மணிக்கு சிறப்பு ரதத்துடன் குழுவினர் பயணத்தை துவக்கினர். சேத்துப்பட்டு, ஆரணி, திமிரி, ஆற்காடு, சோளிங்கர், அலமேலு மங்காபுரம் வழியாக 5வது நாள் திருப்பதி சென்றடைகின்றனர்.