திருநீலகண்ட நாயனார் 31வது குருபூஜை விழா
ADDED :3223 days ago
சென்னிமலை: சென்னிமலையில், திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது. சிவனடியார்களான, 63 நாயன்மார்களில், முதல்வராக திகழும் திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா, சென்னிமலை பகுதி குலாலர் இனத்தவர் சார்பாக, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதன்படி, 31வது குருபூஜை விழா நேற்று நடந்தது.
இதையொட்டி சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு மண்டபத்திலிருந்து, காலை, 8:00 மணிக்கு, தீர்த்தக்குடங்களுடன் பக்தர்கள், கைலாசநாதர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதன்பின், பூணூல் அணிந்து, உப்பிலிபாளையம் சாலையில் உள்ள திருநீலகண்ட நாயனார் கோவிலுக்கு, ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.