உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை கோவிலில் உழவாரப் பணி

சென்னிமலை கோவிலில் உழவாரப் பணி

சென்னிமலை: தைப்பூச விழாவை முன்னிட்டு, கைலாசநாதர் கோவிலில் உழவாரப் பணி நடந்தது. சென்னிமலை, மலை மீதுள்ள சுப்ரமணியர் கோவில், கிழக்கு ராஜவீதியில் உள்ள கைலாசநாதர் கோவில்களில், தைப்பூச திருவிழா நடைபெறும். இதை முன்னிட்டு கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி நேற்று நடந்தது. கைலாசநாதர் கோவில் கருவறை, சுவாமி சிலைகள், உற்சவ மூர்த்திகள், விளக்குகள் என அனைத்தையும், கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !