சென்னையில் கலவரம்: பஞ்சாங்கத்தில் கணிப்பு
திருப்பூர், : ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் அதை தொடர்ந்து சென்னையில் நடந்த கலவரம் குறித்து, பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசு அவசர சட்டம் இயற்றியும், போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஊடுருவிய, சமூக விரோதிகள், திட்டமிட்டு சென்னையில் கலவரத்தை ஏற்படுத்தினர்.இந்த நிகழ்வுகள் குறித்து, தமிழ் பஞ்சாங்கத்தில் முன்னதாகவே, துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த பலரும் ஆச்சரியப்படுகின்றனர். பஞ்சாங்கத்தில், மகர சங்கராந்தி புருஷர், மரண யோகத்தில் வருவதால், எங்கும் விபத்து மற்றும் அக்னி பயம் உண்டாகும். விமான போக்குவரத்து பாதிக்கும். மாநிலத்தின் தலைநகரங்களில், போராட்டம், தர்ணா, மறியல் உள்ளிட்டவை நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பஞ்சாங்க குறிப்பு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.