உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னியம்மனுக்கு சிறப்பு உற்சவம்

அன்னியம்மனுக்கு சிறப்பு உற்சவம்

ஆர்.கே.பே ட்டை: தை மாதம் பொங்கல் திருவிழாவை ஒட்டி, அன்னியம்மனுக்கு, நேற்று முன்தினம், சிறப்பு உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஆர். கே . பேட்டை அடுத்த , வங்கனுார் கிராமத்தில், செராத்துாரான் குலமரபினரின் குல தெய்வமான அம்மனியம்மன் கோவில் அமைந்துள்ளது. தை , ஆடி மாதங்களில் இங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த தை பொங்கல் விழாவில், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். காலை 10:00 மணிக்கு. கணபதி பூஜையுடன் உற்சவம் துவங்கியது. மதியம் 12: 00 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னியம்மனை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !