குருவித்துறை கோயிலில் வெள்ளி கவசத்தில் சக்கரத்தாழ்வார்
ADDED :3214 days ago
குருவித்துறை: மதுரை குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் சுயம்பு குருபகவான் சுவாமி சன்னிதியில் சுயம்பு சக்கரத்தாழ்வார் எழுந்தருளி உள்ளார். வியாழக்கிழமை சுவாமி உகந்த நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி வெள்ளிகவச அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் செய்திருந்தார்.