உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகத்தில், நாளை யாகசாலை பூஜை துவங்குகிறது.

108 யாக குண்டங்கள், 1,008 கலசங்கள் வைத்து, பூஜை செய்யப்பட உள்ளது. இதில், 400 சிவாச்சாரியார்கள், 160 வேத விற்பன்னர்கள் ஈடுபடுகின்றனர். யாகசாலை பூஜை நடப்பதற்கு முன், நகர காவல் தெய்வம் துர்க்கையம்மன், கோவில் காவல் தெய்வம் பிடாரி அம்மன், முழு முதற்கடவுள் விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.நேற்று காலை, சம்மந்த விநாயகர் சன்னிதி முன், ஸ்ரீமூர்த்தி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.யாகசாலை ஹோமத்திற்கு பயன்படுத்தப்பட உள்ள பொருட்கள், கோவில் வளாகத்தில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !