தீர்த்தாண்டாதனத்தில் பெரியநாயகி தாயாருக்கு 108 கோ பூஜை
ADDED :3210 days ago
திருவாடானை: தொண்டி அருகே தீர்த்தாண்டாதனத்தில் உள்ள சர்வதீர்த்தேஸ்வரர், பெரியநாயகி தாயாருக்கு 108 கோ பூஜை, மூலிகை அபிஷேகம், சங்காபிஷேகம், கலச அபிஷேகம் மற்றும் 108 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மதுரை ஆலவாயர் அருட்பணி மன்றம் சார்பில் நடந்த இந்த விழாவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.