சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் ரூ.20 லட்சம் மதிப்பில் புனரமைப்பு
ADDED :3211 days ago
வந்தவாசி: வந்தவாசியில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனரமைப்பு பணி துவக்கத்திற்காக நேற்று பூஜை நடந்தது. வந்தவாசி டவுன், இரட்டை வாடை செட்டி தெருவில், பழமை வாய்ந்த சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம், வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. இதையொட்டி, கோவில் புனரமைப்பு பணி செய்வதற்காக, பொது மக்கள் பங்களிப்புடன், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், புனரமைப்பு பணி நடக்க உள்ளது. இந்த பணி துவக்கத்திற்கான பூஜை, கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.