உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் தேவாரம் முழங்க 2ம்கால யாக பூஜை துவக்கம்!

அருணாசலேஸ்வரர் கோவிலில் தேவாரம் முழங்க 2ம்கால யாக பூஜை துவக்கம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் 5ஆம் பிரஹாரத்தில் அமைக்கப்பட்ட பிராமாண்ட  யாகசாலை மண்டபத்தில் காலை இரண்டாம்  கால யாகபூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று கோவில், ஐந்தாம் பிரகாரத்தில், யாகசாலை பூஜை துவங்கியது.இதற்காக, நாட்டுக்கோட்டை நகரத்தார் உபயத்தால், 3.50 கோடி ரூபாய் மதிப்பில், 27 ஆயிரம் சதுர அடியில், 108 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம், கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் 1,008 கலசங்கள் வைத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு பூஜை துவங்கியது.

5ஆம் பிரஹாரத்தில் அமைக்கப்பட்ட பிராமாண்ட  யாகசாலை மண்டபத்தில் இன்று காலை இரண்டாம்  கால யாகபூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு யாகசாலை மண்டபத்தின்  அருகே பல்வேறு மாநிலத்திலிருந்து 150க்கு மேற்பட்ட சாஸ்த்திரிகள் வந்து தேவாரம் பாடினர். இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !