கருவறையில் சாளக்ராம பெருமாள்!
ADDED :3567 days ago
விழுப்புரம் மாவட்டம், கண்ணாச்சிபுரம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது ஆலம்பாடி குண்டு சட்டிப் பெருமாள் திருக்கோயில். திருப்பதி சென்று பெருமாளை தரிசிக்க நினைத்த ஒரு விதவைப் பெண்ணின் துன்பத்தை போக்கி, கருமை நிற சாளக்ரம வடிவில் காட்சி தந்து இத்தலத்தில் அருள்பாலித்தாராம் பெருமாள். இக்கோயிலில் மூன்று துவாரங்கள் உள்ளன. அதில் ஒரு துவாரத்தின் மூலம் மூலவரை தரிசிக்க சங்கின் தோற்றமாகவும், மற்றொன்றில் தரிசிக்க சக்கரத்தின் தோற்றமாகவும் பெருமாள் காட்சி தருவது வேறு எங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சி.