ஒரே கோயிலில் ஐந்து நரசிம்மர்கள்!
ADDED :3567 days ago
ஹைதராபாத்திலிருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ளது யாதகிரிகுட்டா நரசிம்மர் மலைக்கோயில். இங்குள்ள குகையில் யோக நரசிம்மர், உக்ர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், பேருண்ட நரசிம்மர், கல்யாண நரசிம்மர் என ஐந்து வடிவங்களில் நரசிம்மப் பெருமாள் கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றார். இத்தல பெருமாள், திருப்பதி வேங்கடவனின் அண்ணனாக வணங்கப்படுவது சிறப்பு.