உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்கோயில்களில் தாளத்ரயம்!

சிவன்கோயில்களில் தாளத்ரயம்!

சிவன்கோயிலில் உள்ள சண்டிகேச்வரர் சன்னிதியில் ஓங்கிக் கைதட்டிச் சப்தம் எழுப்புவதும், நம் ஆடைகளின் நூலைப் பெயர்த்து அவருக்குச் சாத்துவதுமாக சில தவறுகள் நிகழ்கின்றன. சிவன்கோயில்களில் ஒவ்வொரு மூர்த்தியையும் இன்ன முத்திரைகளுடன் வழிபடவேண்டும் என நியதி உள்ளது. சண்டிகேச்வரர் எப்போதும் சிவத் தியானத்தில் இருப்பவர். அவருக்கு இடது உள்ளங்கையில் வலது கை இரு விரல்கள் கூட்டி தாளத்ரயம் செய்ய வேண்டும் என்பதை உணராமல் கைதட்டிச் சப்தம் போடுகிறார்கள். 36 கரணங்கள் கொண்ட கர வித்தியாசங்களில் ஒன்றே இந்தத் தாளத்ரயம் சண்டிகேச்வரரின் தியானத்துக்கு இடையூறு செய்யாமல் அவரை மவுனமாக வழிபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !