உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து முகங்களுடன் முருகப்பெருமான்!

ஐந்து முகங்களுடன் முருகப்பெருமான்!

கோவை - புஞ்சை புளியம்பட்டியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது இரும்பறை. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ளது ஓதி மலை முருகன் கோயில். மலைக்கு மேலுள்ள முருகன் கோயிலுக்குச் செல்ல 1800 படிகள் ஏற வேண்டும். இங்கே, கருவறையில் ஐந்து முகங்களுடனும் எட்டு திருக்கரங்களுடனும் அதிகாரத் தோரணையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். இந்தப் பகுதியில் உள்ள மண் வெண்ணிறத்தில் காட்சி தரும். இதையே, பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக தருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !