உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சின்னமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

இடைப்பாடி: இடைப்பாடி அருகே, சின்னமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். சேலம், இடைப்பாடி அருகே, கவுண்டம்பட்டியில் உள்ள சின்னமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஊர்கவுண்டர் முருகையன் தலைமையில், நடந்தது. அதில், கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை, சிவாச்சாரியார்கள், கோபுர கலசங்கள் மீது ஊற்றி, கும்பாஷேகத்தை நடத்தினர். இதில், இடைப்பாடி, வெள்ளாண்டிவலசு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !