உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தன் என்பதன் பொருள்!

கந்தன் என்பதன் பொருள்!

கந்தன்’ என்ற சொல்லுக்கு பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்பவர்’ என்று வடமொழி நிகண்டு பொருள் கூறுகிறது. பகைவர் என்றால் வெளியில் இருந்து வருபவர் அல்ல. நம் மனமே நமக்குப் பகையாக இருக்கிறது. தேவையில்லாததை எல்லாம் சிந்திக்கிறது. இந்த மனப்பகைவனிடம் இருந்து நம்மைக் காப்பவன் கந்தன். கந்து’ என்றால் யானையைக் கட்டிப்போடும் தறி’. உயிர்கள் என்னும் யானைகளை ஆசைகளில் இருந்து மீட்டு அவர்களைக் கட்டிப் போடுபவன் என்பதால் அவர் கந்தன்’ ஆனார். கந்து’ என்ற சொல்லுக்கு பற்றுக்கோடு’ என்ற பொருளும் இருக்கிறது. உயிர்கள் கந்தப்பெருமானை பற்றிக் கொண்டால் அவர்கள் பிறவிச்சுழலில் இருந்து மீள்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !