உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

உடுமலை:உடுமலை, அருகே, கோட்டமங்கலம், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.கும்பாபிேஷக விழா,  நேற்றுமுன்தினம் துவங்கியது. நேற்று காலை, 5:00 மணிக்கு, புருஷ சூக்த, நாராயன சூக்த ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து, நாடி சந்தானம், திரவியாகுதி, பூர்ணாகுதி, யாத்ராதானம், நான்காம் கால வேள்விகள் நிறைவு பெற்றன. கும்பத்துக்கு தீபாராதனை செய்யப்பட்டு, 7:30 மணிக்கு கும்பாபிேஷகம் நடந்தது. பக்தர்களுக்கு கும்பாபிேஷக தீர்த்தம் தெளிக்கப்பட்டது. காலை, மகாபிேஷகம், தசதர்சனம், தசதானம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை செய்யப்பட்டது.பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !