உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை

பகவதி அம்மன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற நிறைபுத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வயல்களில் நெற்கதிர்கள் விளைச்சல் நிறைவடையும் போது அந்த நெற்கதிர்களை கோயில்களில் சுவாமிக்கு படைத்து நடத்தப்படுவது நிறை புத்தரிசி பூஜையாகும். அமோக விளைச்சல் வேண்டி எல்லா ஆண்டும் கும்பப்பூ, கன்னிப்பூ சாகுபடி முடிவடையும் போது இந்த பூஜை நடைபெறும். நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இந்த பூஜை நடைபெற்றது.ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட நெற்கதிர்களை பகவதி அம்மன் மூலஸ்தான மண்டபத்தில் வைத்து மேல்சாந்திகள் ராதாகிருஷ்ணன் போற்றி. மணிகண்டன் போற்றி ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டிருந்தது. தீபாராதனைக்கு பின் நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நெற்கதிர்களை வீட்டில் கொண்டு வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !