அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3266 days ago
காரைக்கால்: அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை மற்றும் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய்கிழமை இரவு பக்தர்கள் நேர்த்தி கடனை நிறைவேற்ற இரவு கோவிலில் தங்கி வழிபடுவர். இந்நிலையில் தை மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை மற்றும் ஏக தின லட்சார்சனை விழா நடைபெற்றது. இவ்விழாவில் குடும்பம் நன்மை வேண்டி, 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜைகளில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் கோவில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.