உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலையில் 3ம் நாள் தேரோட்டம்

சிவன்மலையில் 3ம் நாள் தேரோட்டம்

திருப்பூர் : காங்கயம் சிவன்மலையில், தைப்பூச தேர்த்திருவிழாவில், மூன்றாம் நாளாக தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. காங்கயம் சிவன்மலையில் பிரசித்தி பெற்ற, சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தேர்த்திருவிழா நடந்து வருகிறது. மூன்றாவது நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது. "சிவன்மலை ஆண்டவருக்கு அரோகரா கோஷம் முழங்க, பக்தர்கள் தேர் இழுத்தனர். மலையை வலம் வந்த, தேர் மாலை, 6:25 மணிக்கு நிலையை அடைந்தது.ரதத்தில் உள்ள உற்சவமூர்த்திக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பிப்., 19 ம் தேதி மஞ்சள் நீராட்டு, கொடி இறக்குதல் பாலிகை நீர்த்துறை சேர்தடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழாவையொட்டி, காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கிராம மக்கள்காவடி எடுத்துவந்து தங்கள் நேர்த்தி கடனை செத்தினார்கள். நேற்று விடுமுறை தினம் என்பதாம், சிவன்மலை பகுதியெங்கும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி காப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !