உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வேஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் குரு பூஜை விழா

விஸ்வேஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் குரு பூஜை விழா

திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், எறிபத்த நாயனாருக்கு குரு பூஜை விழா, நேற்று நடைபெற்றது. எறிபத்த நாயனார், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். கையில் எப்போதும் மழுவுடன் இருப்பவர். ஒருமுறை, இவர் எடுத்து வந்த சிவ பூஜைக்கு உரிய பூக்களை, புகழ் சோழரின் பட்டத்து யானை தட்டிவிட்டது. அந்த யானையயும், அதன் பாதுகாவலரை யும், எறிபத்த நாயனார் மழுவால் வெட்டி தண்டித்தார்.இதையறிந்த, சோழன், தன்னையும் தண்டித்துக் கொள்ள முயன்றார். அப்போது, வாளை பெற்று, தன்னையை வெட்டிக்கொள்ள, எறிபத்த நாயனார் முற்பட்டார். எறிபத்த நாயனாரின் பெருமையை அறிந்த சிவ பெருமான், உமையம்மையுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி, இறந்தவர்களை உயிர்ப்பித்து அருள் வழங்கினார். இவர் முக்தியடைந்த, மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தன்று, குருபூஜை விழா நடைபெறுகிறது. அவ்வகையில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள, எறிபத்த நாயனாருக்கு, நேற்று குரு பூஜை விழா நடைபெற்றது. அர்த்த சாமபூஜை அடியார் திருக் கூட் டத்தினர் மூலம், சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !