மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற வறட்சியிலும் வற்றாத சீதலா தீர்த்தம்
ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை சுயம்பு வராஹி அம்மன் கோயிலில் மாணிக்க வாசகரால் பாடல் பெற்ற சீதலா தீர்த்தம் வறட்சியிலும் தண்ணீர் வற்றாமல் உள்ளது.
உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலின் உப கோயிலாக சுயம்பு மகா வராஹி அம்மன் கோயில் உள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முந்தைய இக்கோயிலில் பஞ்சமி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இந்த கோயிலின் தல தீர்த்தமாக சீதலா தீர்த்தம் உள்ளது. “சீதப்புனலாடி.. சிற்றம்பலம்பாடி.. என்று மாணிக்க வாசகரால் பாடல் பெற்றதாக சீதலா தீர்த்தம் உள்ளது. இங்குதான் மங்களநாதசுவாமி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. வராஹி அம்மன் பிரசாதமாக மஞ்சள் உள்ளது. அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகத்திற்கும் இந்த தீர்த்த நீரே பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க இந்த தீர்த்தம் தற்போது நிலவும் கடும் வறட்சியிலும் வற்றாமல் நீர் தேங்கி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இது கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.