உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆளவந்தீஸ்வரர் கோவில் குளத்தில் உழவாரப்பணி

ஆளவந்தீஸ்வரர் கோவில் குளத்தில் உழவாரப்பணி

கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோவில், தெப்பக்குளம் பகுதியை, என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் உழவார பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலின் தெப்பக்குளம், லட்சுமணம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது. இந்த குளத்தில், தற்போது சீமை கருவேல மரங்கள், மதுபான பாட்டில்கள், குப்பை ஆகியன சூழ்ந்து சுகாதாரமற்ற நிலையில் கிடக்கிறது. இந்த கழிவுகளை அகற்றும் வகையில், பழையஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியின், என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள், நேற்று உழவாரப்பணிகளை மேற்கொண்டனர். அப்போது, தெப்பக்குளத்தில் இருந்த சீமை கருவேல முட்செடிகள், முட்புதர், குப்பைகளை அப்புறப்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் விஜி, என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் யோகரத்தினம், மலைக்கொழுந்தன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !