உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பவானி: பவானி அருகே, தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பவானி, அம்மாபேட்டை யூனியன், கன்னப்பள்ளி கிராமம், பி.கே.பழையூரில், தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 1ல், காவிரியாற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 8:30 மணியளவில், தேவி கருமாரியம்மன் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !