உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானப்பட்டியில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு

தேவதானப்பட்டியில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவில், பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா பிப்.24 இரவு துவங்கி நான்கு நாட்களாக நடந்து வருகிறது. இவ்விழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நேற்று திண்டுக்கல்,தேனி, மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர்.

சிரமம்: இக்கோயில் அலுவலக தொலைபேசி நான்கு நாட்களாக செயல்படவில்லை. இதனால் குறைகளை தெரிவிக்க, உதவி கேட்க நிர்வாக அதிகாரியை தொடர்பு கொள்ள முடியாமல் பலரும் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !