முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் பால்குடம் புறப்பாடு
ADDED :3148 days ago
ராமநாதபுரம்; ராமநாதபுரம் முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில் சிவராத்திரி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பிப்.,17ல் துவங்கிய விழாவை முன்னிட்டு தினமும் காலை சப்பரத்தில் அம்பாள் வீதியுலா வந்தார். இரவு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மார்ச் 25ல் தேரோட்டம், 26ல் கோயில் குளத்தில் மஞ்சள் நீராட்டு நடந்தது. 11ம் நாள் நிகழ்வாக பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து மகா அபிஷேகம் நடந்தது. இரவு புஷ்ப பல்லக்கில் முத்தால பரமேஸ்வரி அம்பாள் ஆனந்த சயன கோலத்தில் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்ச் 2ல் உற்சவ சாந்தி அபிஷேகம் நடக்கிறது.