உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடம் தீர்க்கும் சரபேஸ்வரர்!

சங்கடம் தீர்க்கும் சரபேஸ்வரர்!

இரண்யனைச் சம்ஹாரம் செய்வதற்காக திருமால்நரசிம்மராக அவதரித்தார். நகங்களால் அசுரனின்உடலைக் கிழித்து உக்கிர கோலத்தில் காட்சியளித்தார். அவரைச் சாந்தப்படுத்தும்படி சிவனிடம் தேவர்கள்முறையிட்டனர். யாளி, பறவை, மனித முகம் என மூன்றும் கலந்த அபூர்வ தோற்றத்துடன்சரபேஸ்வரராக சிவன் எழுந்தருளினார். தன் இரு இறக்கைகளால் வீசி நரசிம்மரைக் குளிர்வித்தார். தேவர்களும், முனிவர்களும் ஒன்று கூடி அரியாகிய  நரசிம்மரையும், அரனாகிய சரபேஸ்வரரையும் மலர்மாரி பொழிந்து வழிபட்டனர். சுவாதி, திருவாதிரை, அஷ்டமி நாட்களிலும், வெள்ளி, ஞாயிறன்று ராகு வேளையிலும் சரபேஸ்வரருக்கு நாட்டுச் சர்க்கரை படைத்து வழிபட்டால் மனதில்மகிழ்ச்சி நிலைக்கும். எதிரி பயம் தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !