ஜீவகாருண்யம் என்பதன் பொருள் என்ன?
ADDED :3541 days ago
உயிர்கள் மீது இரக்கம் என்பது பொருள். எறும்போ, ஈயோ எல்லாவற்றின் மீதும் கருணை கொள்வது. வயலில் தண்ணீரின்றி பயிர்கள் வாடிய போது, அதையும் ஒரு உயிராகக் கருதி வாடியவர் வள்ளலார். மனநிம்மதி வேண்டும் என்றால் எல்லா உயிர்கள் மீதும் கருணை காட்ட வேண்டும்... நமக்கு துன்பம் செய்யும் உயிர்கள் வந்தால் அதைத் தொல்லை செய்யாமல் விலகிச் சென்று விட வேண்டும்.