தீய சக்தியான அசுரர்களையும் கடவுள் ஏன் படைக்க வேண்டும்?
ADDED :3541 days ago
பகலும், இரவும் சேர்ந்தது தானே நாள். அதுபோல, நல்லதும், கெட்டதும் கலந்ததே உலகம். இதை மிச்ர லோகம் என்பர். மிச்ர என்றால் கலந்தது என்று பொருள். விருப்பு- வெறுப்பு, இன்பம்- துன்பம், நட்பு- பகை, ஆண்- பெண், இளமை-முதுமை, பிறப்பு- இறப்பு என எதிலும் இரண்டின் கலப்பு இருப்பதைக் காணலாம். இதுவே கடவுள் வகுத்த நியதி. இறைவனின் இந்தச் செயலைப் பற்றி ஆராய ஆரம்பித்தால் நிச்சயம் முடிவு தெரியாது.