சூரியேஸ்வரர் மீது சூரியஒளி: பொதுமக்கள் சுவாமி தரிசனம்
ADDED :3204 days ago
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரத்தை அடுத்த, சூரப்பள்ளி பஞ்சாயத்து கோட்டை மேட்டில், சூரியேஸ்வரர், கமலாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. பிரதோஷதினத்தில், உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய இங்கு வருவர். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்களுக்கு, சூரியேஸ்வரர் மீது சூரிய ஒளி படும். நேற்று, சூரியேஸ்வரர் மீது பட்ட சூரிய ஒளியை, ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.