உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் ஆரம்பம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் ஆரம்பம்

திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா துவங்கியுள்ள நிலையில்,பாதுகாப்பு உள்ளிட்ட பிற ஏற்பாடுகள், சரிவர செய்யவில்லை என, பக்தர்களிடையே புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது.

அறுபடை வீடுகளுக்கு நிகராக, இங்குள்ள முருகன் போற்றப்படுவதாலும், வேறெந்த முருகன் கோவிலிலும் இல்லாத யந்திர முருகன், இக்கோவிலில் உள்ளது. கிருத்திகை மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானை தரிசிக்க வருவர். குறிப்பாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து கூட்டம் அலைமோதும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டிற்கான விழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. அதற்கு முன், நேற்று மாலை விநாயகர் உற்சவத்துடன் துவங்கிய இவ்விழாவில், இன்று காலை, 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள்ளாக கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து, 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வு:
களான ரதோற்சவம், 8ம் தேதி புதன் கிழமையும், 11ம் தேதி சனிக்கிழமை மாலை தெப்போற்சவமும், 13ம் தேதி திங்கட்கிழமை காலை திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடக்க உள்ளது. மேலும், உற்சவ நாட்களில் காலை மற்றும் மாலை இரு வேளையும் சுவாமி வீதியுலா நடைபெறும். இவ்விழாவில், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !