ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
ADDED :3147 days ago
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், அவதரித்த ஸ்ரீராமனுஜரின், ஆயிரமாவது ஆண்டு அவதார திருநட்சத்திர விழாவை கொண்டாடும் வகையில், ஆதிகேசவப் பெருமாள் கோவில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திர விழா, ஏப்ரல், 21ல் துவங்கி, மே, 2ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. ஸ்ரீபெரும்புதுாரில் விழா நடைபெற உள்ள, ஸ்ரீராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் புனரமைப்பு பணிகள், உபயதாரர்கள் அளிக்கும் நிதியுதவியுடன் முழு வீச்சில் நடக்கின்றன. மேலும், கோவிலுக்கு எதிரே உள்ள, ஸ்ரீராமானுஜரின் அவதார மண்டபத்தையும் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.