உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்

செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, செல்லாண்டியம்மன் கோவில் விழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்தனர். சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் செல்லாண்டியம்மன், காமாட்சியம்மன் மற்றும் சக்தி மாரியம்மன் கோவில்களில் குண்டம் விழா, கடந்த மாதம், 14ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு தொடங்கியது. கோவில் தலைமை பூசாரி, குண்டத்திற்கு பூஜை செய்து முதலில் தீ மிதித்தார். அவரைத் தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்தனர். பெண்கள் பலர், கையில் குழந்தையுடன் தீ மிதித்தனர். விழாவை முன்னிட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !