கும்பகோணம் மாசி மக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :3138 days ago
தஞ்சாவூர்: - கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், 10 நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம், மக நட்சத்திரத்தன்று, மாசி மக விழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகா மக விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, 2016ல் மகா மகம் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று மகா மகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோவில், உள்ளிட்ட சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் நேற்று விழா துவங்கியது. முதலாவதாக ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலில் கொடியேற்றப்பட்டது.
வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபால சுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில், இன்று காலை, 9:30 மணிக்கு, 10 நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.