உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பை சங்கீத உற்சவம் மார்ச் 5ல் துவக்கம்

செம்பை சங்கீத உற்சவம் மார்ச் 5ல் துவக்கம்

பாலக்காடு: கர்நாடக இசை மேதை வைத்தியநாத பாகவதர் துவக்கி வைத்த, செம்பை ஏகாதசி சங்கீத உற்சவத்தின் 103ம் ஆண்டு விழா, மார்ச் 5 முதல் 8 வரை நடக்க உள்ளது.கேரளா பாலக்காடு அருகே கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி விழாவில், சங்கீத உற்சவம் பிரசித்தி பெற்றது. செம்பை குடும்பத்தினர், பல ஆண்டுகளாக நடத்தி வரும் இவ்விழாவில் பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்பர். இந்த சங்கீத உற்சவம் மார்ச் 5 முதல் 8 வரை நடக்க உள்ளது. நாளை கொடியேற்றம் நடக்கிறது. செம்பை ஸ்ரீனிவாசன், செம்பை சுரேஷ் உள்ளிட்ட குடும்பத்தினரும், கோவில் நிர்வாகத்தினரும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !