காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3139 days ago
உடுமலை : உடுமலை, தளி ரோடு, காமாட்சி அம்மன் கோவிலில், திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. நேற்றுமுன்தினம், திருமூர்த்திமலையிலிருந்து, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று காலை, 7:30 மணிக்கு, அம்மனுக்கு தீர்த்த அபிேஷகமும், 11:00 மணி அளவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பக்தர்களுக்கு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பர ஈஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில், சப்பரத்தில் திருஉலா நடந்தது.