உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுருகநாதவாமி கோவில் தேர்த்திருவிழா

திருமுருகநாதவாமி கோவில் தேர்த்திருவிழா

திருப்பூர்: திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் மாசி தேர்த்திருவிழா, வரும், 5ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 11ல் தேரோட்டம் நடக்கிறது. திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில், பிரசித்தி பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. சூரணிக் அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க, முருகப்பெருமான், தனது தந்தையான பரம்பொருளை பிரதிஷ்டை செய்து வழிபட்ட கோவிலாகவும், சுந்தரமூர்த்தி நாயனார் வேடுபறி திருவிளையாடல் நடந்த கோவில், பிரம்ம தீர்த்தம், ஞான தீர்த்தம், சுப்ரமணிய தீர்த்தம் என, சிறப்புகள் நிறைந்த இக்கோவிலின் தேர்த்திருவிழா, நாளை கிரணிம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. வரும், 5ம் தேதி, தேர்த்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. 10ம் தேதி, சுவாமி திருக்கல்யாணம்; யானை வாகன அன்ன வாகனகாட்சி நடக்கிறது. 11ல், அதிகாலை, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை, 3:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. மீண்டும் 12ம் தேதி, தேரோட்டம் நடக்கிறது. தேர்த்திருவிழாவில், வரும் 13ம் தேதி, பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகன காட்சிகள், தெப்பத்தேர் மற்றும், 14ம் தேதி, சுந்தரர் வேடுபறி திருவிழா ஆகியன நடக்கிறது. 15ல், பிரம்மதாண்டவ தரிசன காட்சியும், 16ம் தேதி, மஞ்சள் நீர், மயில் வாகன காட்சியுடன் , விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி, தினமும், இரவு, 7:00 மணிக்கு, கோவில் முன் அமைக்கப்படும் கலையரங்கில், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !