உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா: உற்சவர் வீதியுலா

திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா: உற்சவர் வீதியுலா

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று நடைபெற்ற மாசி பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பல்­லாக்கு சேவையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருத்தணி முருகன் கோவிலில், மாசிமாத பிரம்மோற்சவ விழா, கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு, கேடயவாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தினமும் காலை மற்றும், இரவு நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில், நான்காம் நாளான நேற்று, காலை , 8:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல், வைரகீரிடம் மற்றும் வைர ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை , 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலையில், அன்ன வாகனத்திலும், இரவில் வெள்ளி நாக வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 9ம் தேதி உற்சவருக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !