செம்பை பார்த்தசாரதி கோவிலில் சங்கீத உற்சவம் துவக்கம்
ADDED :3217 days ago
பாலக்காடு: பாலக்காடு அருகே, கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவிலில், ஏகாதசி சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது. கர்நாடக இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதரால் துவக்கப்பட்ட இந்த சங்கீத உற்சவத்தை, அவரது குடும்பத்தினர் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். நேற்று, 103வது ஆண்டு சங்கீத உற்சவ துவக்க விழா நடந்தது. உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரீஷ், குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாவட்ட நீதிபதி இந்திரா தலைமை வகித்தார். கேரள சங்கீத நாடக அகாடமி செயலர் ராதாகிருஷ்ணன் பேசினார். மார்ச் 8 வரை நடக்க உள்ள சங்கீத உற்சவத்தில், கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாஸ், ஜயன், விஜய் ஜேசுதாஸ், புவனா ராமசுப்பு ஆகியோரின் கச்சேரிகள் நடக்கின்றன.